மெலட்டூர் அருகே வயல் வெளியில் பழுதடைந்த மின்கம்பங்கள்: சீரமைக்க கோரிக்கை

3 months ago 9

தஞ்சாவூர், பிப்.6: மெலட்டூர் அருகே வயல் வெளியில் பழுதடைந்த நிலையில் உள்ள மின்கம்பங்கள் உடனடியாக சீரமைக்க பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தஞ்சாவூர், மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, பெருமாக்கநல்லூர் அருகே வயல்வெளி வழியாக செல்லும் மின் பாதையில் 2 மின்கம்பங்கள் பழுதடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளன. இரண்டு மின்கம்பங்கள் கம்பிகள் வெளியே தெரியும் அளவில் பழுதடைந்து காணப்படுகிறது. பழுதடைந்த மின்கம்பம் கீழே சாய்ந்து விடுமோ என்ற அச்சத்தில் விவசாய பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் மற்றும் கிராம மக்கள் அப்பகுதியில் வசித்து வருகின்றனர்.

வயல் வெளியில் உள்ள மின்கம்பங்கள் கீழே சாய்ந்து மின் விபத்து ஏற்பட்டால் பல உயிர்கள் உயிரிழக்க நேரிடும். பழுதடைந்த மின்கம்பங்களை அகற்ற கோரி கிராம மக்கள் மின்வாரியத்திடம் ஓராண்டுக்கு மேலாக வலியுறுத்தி வரும் நிலையில் மின் வாரியம் பழுதடைந்த மின்கம்பங்கள் அருகே மின்கம்பங்களை நட்டு வைத்ததோடு சரி பழதடைந்த மின்கம்பங்கள் அகற்றப்படாமல் அப்படியே உள்ளது. மின்வாரிய உயர் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து பழுதடைந்த நிலையில் உள்ள மின்கம்பங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மெலட்டூர் அருகே வயல் வெளியில் பழுதடைந்த மின்கம்பங்கள்: சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article