மெரினா லூப் சாலையில் ரோந்து போலீசை மிரட்டிய விவகாரம்; பழைய கார் விற்பனையாளர் தோழியுடன் கைது: வேளச்சேரி விடுதியில் பதுங்கியிருந்தபோது சிக்கினர்

4 months ago 11

சென்னை: சென்னை மெரினா லூப் சாலையில் நேற்று முன்தினம் இரவு மயிலாப்பூர் காவல் நிலைய காவலர் சிலம்பரசன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஜோடி ஒன்று சொகுசு காரில் லூப் சாலையில் உள்ள மாநகராட்சி சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மீன் மார்க்கெட் அருகே, சாலையில் இடையூறாக காரை நிறுத்திவிட்டு, சந்தேகத்திற்கு இடமான வகையில் நெருக்கமாக இருந்தனர். இதை பார்த்த ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர், ஜோடியிடம் நள்ளிரவு தனியாக கடற்கரைக்கு செல்ல வேண்டாம். வீட்டிற்கு கிளம்புங்கள் என்று கூறியுள்ளனர். அதை கேட்ட ஜோடி, திடீரென காவலரை பார்த்து ஒருமையில் கடுமையாக பேசினர். அதோடு இல்லாமல், அந்த பெண் தன்னுடன் வந்தவரின் கையை தனது தோளில் வைத்தபடி எடுங்க வீடியோ என்று கூறினார். அந்த ஆண், காவலரை நோக்கி மிக அநாகரிகமாக பேசினார். ‘முக்காலணா போனை வச்சுக்கிட்டு வீடியோ எடுக்கிற…. 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள 16 புரோ ஐ-போன் வைத்து இருக்கிறேன். போடா பல்லி மூஞ்சி. காலையில் எல்லோர் சட்டையை கழற்றிவிடுவேன், எங்கள் வீட்டிற்கு வந்து கெஞ்சும் வகையில் செய்துவிடுவேன்’ என கூறி இழிவுபடுத்தினார்.

மேலும், நான் காரை எடுத்தா தானே என் மீது கேஸ் போடுவ…. நான் ஆக்டிங் டிரைவரை வரவச்சு போவேன் டா… உன்னால என்ன செய்ய முடியும் போடா… என்று மிரட்டினார். இதை பார்த்த பொதுமக்கள் காவலர்களிடம் தகராறு செய்த ஜோடியை தட்டிக்ேகட்டனர். அதற்கு போதையில் இருந்த ஜோடி பொதுமக்களையும் இழிவாக பேசினர். ஒரு கட்டத்தில் அந்த ஜோடி அங்கிருந்து சென்றனர். குடிபோதையில் தகராறு செய்த அவர்களின் பேச்சு அப்பகுதி மக்கள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தனர். இதையடுத்து போதை ஜோடி காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்து மிரட்டும் வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. அதேநேரம் காவலர் சிலம்பரசன் மயிலாப்பூர் காவல் நிலையத்தில், தான் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, தம்பதி தன்னை பணி செய்யவிடாமல் ஒருமையில் பேசியும், தாக்க முயன்றதாக புகார் அளித்தார்.

புகாரின்படி மயிலாப்பூர் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், மெரினா லூப் சாலையில் தகராறு ெசய்தது தம்பதி இல்லை என்றும், வேளச்சேரி மருதுபாண்டி சாலையை சேர்ந்த பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் சந்திரமோகன் (44) என்பதும், இவர் தனது தோழியுடன் நெருக்கமாக இருக்க மெரினாவுக்கு கடந்து 15 வருடங்களாக வந்ததும் தெரியவந்தது. அதைதொடர்ந்து, போலீசார் சந்திரமோகன் மற்றும் அவரது தோழி மீது அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்தனர். பிறகு சந்திரமோகன், அவரது தோழியை போலீசார் வேளச்சேரியில் உள்ள தங்கும் விடுதியில் ேநற்று கைது செய்தனர். பிறகு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்துகின்றனர்.

The post மெரினா லூப் சாலையில் ரோந்து போலீசை மிரட்டிய விவகாரம்; பழைய கார் விற்பனையாளர் தோழியுடன் கைது: வேளச்சேரி விடுதியில் பதுங்கியிருந்தபோது சிக்கினர் appeared first on Dinakaran.

Read Entire Article