மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு

3 months ago 17

சென்னை: மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழந்தார். காமராஜர் சாலையில் மயக்கமடைந்த நபருக்கு ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த ஜான் என்பவர் காமராஜர் சாலையில் மயக்கமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சாகச நிகழ்ச்சியை காண வந்த 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். மயக்கமடைந்த 4 பேர் மருத்துவமனையில் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.

The post மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Read Entire Article