மெரினா கடற்கரையில் அக்.6ஆம் தேதி முதல் அக்.8 வரை நடைபெறவுள்ள இந்திய விமானப் படையின் வான்சாகச நிகழ்ச்சி

7 months ago 44
இந்திய விமானப் படையின் 92 -வது தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் வரும் 6-ம் தேதி வான் சாகச நிகழ்ச்சியும் அதையொட்டி ஒத்திகையும் நடைபெறவுள்ளதால், 161 விமானங்களில் புறப்பாடு மற்றும் வருகை நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 8-ம் தேதி தாம்பரம் விமானப்படை தளத்தில் கண்காட்சியும் நடைபெறும் நிலையில், இன்றுமுதல் 8ந் தேதி வரை சென்னை விமான நிலைய வான்தடம் 15 நிமிடங்கள் முதல் இரண்டு மணிநேரம் வரை பல்வேறு இடைவெளிகளில் மூடப்படும் என விமான நிலைய இயக்குனரகம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று மதியம் ஒன்றே முக்கால் மணி முதல், மூன்றேகால் மணிவரை வான் தடம் மூடப்படும் என்றும் இதனால் 20 விமானங்களின் புறப்பாடு மாற்றியமைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. 
Read Entire Article