சென்னை,
நடிகர் கார்த்தியின் 27-வது படமான 'மெய்யழகன்' படத்தை இயக்குனர் பிரேம் குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் கார்த்தியுடன் முதல் முறையாக இணைந்து அரவிந்த் சாமி நடித்துள்ளார். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண், தேவதர்ஷினி, ஜெயப்ரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சூர்யா - ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் வரும் 'நான் போகிறேன்' மற்றும் 'யாரோ இவன் யாரோ' என துவங்கும் இரு பாடல்களை நடிகர் கமல்ஹாசன் பாடியுள்ளார்.
இப்படம் கடந்த 27-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகி, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள 'மெய்யழகன்' படத்திலிருந்து ஸ்னீக் பீக் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த காட்சிகளை ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர். அத்துடன் படத்தில் இடம்பெற்ற அருமையான காட்சிகளில் இதுவும் ஒன்று எனவும் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.