மெய்யழகன் படத்தின் 'அருள் மெய்' வீடியோ பாடல் வெளியீடு

2 months ago 16

சென்னை,

நடிகர் கார்த்தியின் 27-வது படமான 'மெய்யழகன்' படத்தை இயக்குனர் பிரேம் குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் கார்த்தியுடன் முதல் முறையாக இணைந்து அரவிந்த் சாமி நடித்துள்ளார். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண், தேவதர்ஷினி, ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சூர்யா - ஜோதிகாவின் 2-டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். மகேந்திரன் ஜெயராஜூ ஒளிப்பதிவு செய்துள்ளார். கோவிந்தராஜ் படத்தொகுப்பு செய்கிறார்.

கார்த்தி மற்றும் அரவிந்த் சாமிக்கு இடையேயான உறவின் மகத்துவத்தைப் பேசும் படமாக உருவாகியுள்ளது. இப்படம் கடந்த மாதம் 27-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகி, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள, 'நான் போகிறேன்' மற்றும் 'யாரோ இவன் யாரோ' எனத் துவங்கும் இரு பாடல்களை நடிகர் கமல்ஹாசன் பாடியுள்ளார்.

இந்தநிலையில் இந்த படத்திலிருந்து 'அருள் மெய்' எனும் வீடியோ பாடல் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இப்பாடலுக்கு கார்த்திக் நேதா பாடல் வரிகளை எழுதியுள்ளார். மேலும் கோவிந்த் வசந்தா இந்த பாடலை பாடியுள்ளார். 

The heartwarming tale of Arul & Mei , set to a beautiful score. #Arul Mei is out now.Listen and watch here ▶️: https://t.co/yDRe4Bjg75A #GovindVasantha Musical @Karthi_Offl @thearvindswami #PremKumar @2D_ENTPVTLTD @rajsekarpandian @SDsridivya #ThinkMusic pic.twitter.com/K9GVDfBcIG

— Think Music (@thinkmusicindia) October 28, 2024
Read Entire Article