மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு மத்திய அரசின் பங்கு 63 ஆயிரம் கோடியா? தமிழ்நாடு அரசு விளக்கம்

2 hours ago 2

சென்னை,

மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி அளித்தார்.அப்போது பேசிய அவர், சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு நிதி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று தெரிவித்தார்.தொடர்ந்து, மெட்ரோ ரெயில் திட்டம் 2ம் கட்டத்திற்கு மத்திய அரசு ரூ.63,000 கோடி நிதி வழங்குவதாக தகவல் வெளியானது.இந்நிலையில், சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் 2ம் கட்டத்திற்கு, மத்திய அரசு ரூ.63,246 கோடி நிதி வழங்கியுள்ளதாக பரவும் செய்தி தவறானது என தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

சென்னை மெட்ரோ திட்டத்திற்கு மத்திய அரசின் பங்கு ரூ.7,425 கோடி மட்டுமே. தமிழக அரசின் பங்கு- ரூ.22,228 கோடி, கடன் ரூ.33,593 கோடி பங்கிடப்பட்டுள்ளது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் 2ம் கட்டத்திற்கு மத்திய அரசு நேற்று ஒப்புதல் அளித்த நிலையில், தவறான தவலைப் பரப்பாதீர்கள் என தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம் அளித்துள்ளது.

Read Entire Article