மூளைச்சாவு அடைந்த 2 ஆயிரம் பேர் தானமாக வழங்கிய 11,500 உறுப்புகளால் ஏராளமானோர் மறுவாழ்வு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

2 hours ago 4

சென்னை: தமிழகத்தில் உறுப்பு மாற்று சிகிச்சை தொடங்கப்பட்ட கடந்த16 ஆண்டுகளில் மூளைச்சாவு அடைந்த சுமார் 2 ஆயிரம் பேரிடம்இருந்து இதயம், கல்லீரல், நுரையீரல், சிறுநீரகம் என மொத்தம் 11,411 உறுப்புகள் தானமாக பெற்று பயன்படுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் உறுப்பு தான தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதில், உறுப்பு மாற்று விழிப்புணர்வு கையேடு, ‘மறுபிறவி’ என்ற உறுப்புதான விழிப்புணர்வு குறுந்தகடு ஆகியவற்றை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் வெளியிட்டனர். நிகழ்ச்சியில், உறுப்பு கொடையாளர்களின் குடும்பத்தினர் கவுரவிக்கப்பட்டனர். உறுப்பு மாற்றுசிகிச்சையில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

Read Entire Article