மூதாட்டியிடம் 2 பவுன் நகை திருடிச் சென்ற பெண்

9 hours ago 1

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பூகாநல்லி கிராமத்தை சேர்ந்தவர் வேட்ராயன். இவரது மனைவி தங்கம்மாள்(61). நேற்று முன்தினம், தங்கம்மாள் கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள, கட்டுமான தொழிலாளர் நல வாரியத்துக்கு விண்ணப்பிக்க வந்தார். மெயின்ரோட்டில் இருந்து அலுவலகத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு பெண், தங்கம்மாளிடம், ‘தோடு, நகைகளை அணிந்து சென்றால், திருடு போய்விடும்’ எனக்கூறியுள்ளார். இதனால், தங்கம்மாள் தனது நகையை கழட்டி ஒரு பொட்டலத்தில் வைத்துள்ளார்.

அவரிடம் பேச்சு கொடுத்த அந்த பெண், நைசாக வேறு பொட்டலத்தை தங்கம்மாளிடம் கொடுத்து விட்டு, நகை பொட்டலத்துடன் மாயமானார். இதை அறியாமல் தொழிலாளர் நலவாரியத்துக்கு சென்று, நகை பொட்டலத்தை அவிழ்த்த தங்கம்மாள், நகை மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், நகையை திருடியது, தர்மபுரி மாவட்டம் சின்னகுரும்பட்டியை சேர்ந்த பச்சியப்பன் மனைவி கல்பனா(35) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், 2 பவுன் நகையை மீட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மூதாட்டியிடம் 2 பவுன் நகை திருடிச் சென்ற பெண் appeared first on Dinakaran.

Read Entire Article