சேலம், டிச.31: சேலம் மூலப்பிள்ளையார் கோயில் பகுதியை சேர்ந்தவர் வரதராஜன். இவரது மனைவி வசந்தி(62). இவர் கடந்த 27ம் தேதி தனது கணவருடன் வீட்டை பூட்டி விட்டு சூரமங்கலத்தில் உள்ள சிஎஸ்ஐ மருத்துவமனைக்கு சென்றார். பின்னர், மாலையில் வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது.உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த ஒரு பவுன் நகை, ₹27,500 திருடு போயிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வசந்தி, இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அப்புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள சிசிடி கேமராவை பார்த்து ஆய்வு செய்தனர்.அப்போது, வசந்தி வீட்டின் மேல் மாடியில் குடியிருந்து வரும் குமார்(32) என்பவர், வசந்தியின் வீட்டிற்குள் புகுந்து நகை, பணத்தை திருடியது போலீசார் விசாரணையில் தெரிந்தது. இதையடுத்து குமாரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
The post மூதாட்டி வீட்டில் நகை, பணம் திருட்டு appeared first on Dinakaran.