பொங்கல் பரிசுத் தொகுப்பினை குடும்ப அட்டைதாரர்களுக்கு உரிய காலத்தில் வழங்கப்படுவதை உறுதி வேண்டும்: அமைச்சர் சக்கரபாணி உத்தரவு

2 days ago 2

சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்பினை குடும்ப அட்டைதாரர்களுக்கு உரிய காலத்தில் தரத்துடன் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடும் பொருட்டு மக்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பினை பொதுவிநியோக அங்காடிகளின் மூலம் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தடையின்றி வழங்குவது குறித்தும் மற்றும் பொதுவிநியோக அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் குறித்தும் அமைச்சர் சக்கரபாணி ஆய்வுக்கூட்டம் நடத்தினார். அமைச்சர் சக்கரபாணி இன்று துறை சார்ந்த உயர் அலுவலர்களுடன் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில்; முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தினால் நகர்வு செய்யப்படும் பச்சரிசி மற்றும் சர்க்கரையின் தரத்தினை உறுதி செய்ய வேண்டும்.

கரும்பின் நுனியிலிருக்கும் தோகையினை வெட்டாமல் முழுக்கரும்பையும் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கிட கூட்டுறவுத்துறையினருடன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மேலும், பொதுவிநியோக அங்காடிகளில் அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு மற்றும் விநியோகத்தின் நிலையினை மாநிலம் முழுவதும் கண்காணித்து, உடனுக்குடன் குறித்த காலத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அனைத்துப் பொருட்களும் விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும். புதிய குடும்ப அட்டைகளுக்கு விண்ணப்பித்துள்ள விண்ணப்பங்களை உடனுக்குடன் பரிசீலித்து தகுதியுள்ள விண்ணப்பதாரர்களின் குடும்பங்களுக்கு, புதிய குடும்ப அட்டைகள் விரைந்து வழங்க வேண்டும்.

குடும்ப அட்டைகளின் எண்ணிக்கைக்கேற்ப தேவைப்படும் இடங்களில் புதியதாக நியாய விலைக்கடைகளை திறந்திட வேண்டும். புதிய சேமிப்புக்கிடங்குகள் கட்டுவதற்கு தகுதியான நிலங்களைத் தேர்வு செய்திட வேண்டும். குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வுத்துறை அலுவலர்கள் பொதுவிநியோகத்திட்டப் பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கலைத் தடுப்பதற்கு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை பாராட்டியும். எல்லையோர அண்டை மாநிலங்களின் அலுவலர்களுடன் இணைந்து கலந்தாய்வுக்கூட்டங்கள் மேற்கொண்டு அரிசிக் கடத்தலை முற்றிலுமாக ஒழித்திடுமாறும் அறிவுறுத்தினார்.

கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு கூடுதல் தலைமைச்செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக அலுவலர்கள் கூட்டுறவுத்துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து அமைச்சர் அறிவுறுத்தியபடி பொங்கல் பரிசுத் தொகுப்பினை குடும்ப அட்டைதாரர்களுக்கு உரிய காலத்தில் தரத்துடன் வழங்கப்படுவதை உறுதி செய்திடுமாறும் கேட்டுக்கொண்டார்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் தமிழ்நாடு சேமிப்புக்கிடங்கு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சு. பழனிசாமி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் ஆ. அண்ணாதுரை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் அரசு கூடுதல் செயலாளர். அமர்குஷ்வாஹா, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் இயக்குநர் த.மோகன், கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளர்(நுகர்வோர் பணிகள்) காயத்ரி கிருஷ்ணன், மற்றும் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

The post பொங்கல் பரிசுத் தொகுப்பினை குடும்ப அட்டைதாரர்களுக்கு உரிய காலத்தில் வழங்கப்படுவதை உறுதி வேண்டும்: அமைச்சர் சக்கரபாணி உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article