முள்ளங்கிக் கீரை துவட்டல்

1 week ago 9

தேவையானவை:

முள்ளங்கி மேலுள்ள இலைகள் – 1 கப்,
பாசிப்பருப்பு – 2 ஸ்பூன்,
அரிந்த சின்ன வெங்காயம் – ¼ கப்,
மிளகாய் – 2,
உப்பு – திட்டமாக,
தேங்காய் துருவல் – 6 ஸ்பூன்.

தாளிக்க:

எண்ணெய் – 2 ஸ்பூன்,
கடுகு – 1 ஸ்பூன்,
உளுத்தம் பருப்பு – 2 ஸ்பூன்,
பெருங்காய பொடி – ¼ ஸ்பூன்.

செய்முறை:

பாசிப்பருப்பை ¾ வேக்காடு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டியதைத் தாளித்து, வெங்காயத்தை வதக்கி, கீரையை ேசர்க்கவும். கீரை வெந்ததும் உப்பு, பருப்பு சேர்த்து, கடைசியில் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும்.

 

The post முள்ளங்கிக் கீரை துவட்டல் appeared first on Dinakaran.

Read Entire Article