முறைகேடு புகார்கள் செபி தலைவர் மாதபியிடம் விளக்கம் கேட்கிறது லோக்பால்

1 week ago 4

புதுடெல்லி: முறைகேடுகள் புகார் குறித்து செபி தலைவர் மாதபியிடம் லோக்பால் விளக்கம் கேட்டுள்ளது. இந்திய பங்கு சந்தை வாரிய( செபி) தலைவர் மாதபி பூரி புச், அவரின் கணவர் ஆகியோர் அதானி நிறுவனத்தின் வெளிநாட்டு நிறுவனங்களில் பங்கு வைத்துள்ளனர். இந்தக் காரணத்தினாலேயே அதானி தொடர்புடைய பங்குதாரர்களுக்கு எதிராக செபி இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ஹிண்டன்பர்க் குற்றம்சாட்டியது.

மாதபி புரிக்கு எதிராக ஒரு மக்களவை எம்பி மற்றும் இரண்டு பேர் ஊழலுக்கு எதிரான அமைப்பான லோக்பாலில் புகார் அளித்திருந்தனர். இந்த நிலையில், இந்த புகார் குறித்து விளக்கம் அளிக்கும்படி மாதபி புரி புச்சுக்கு லோக்பால் அமைப்பின் தலைவர் நீதிபதி ஏ.எம்.கன்வில்கர் நேற்று உத்தரவிட்டார். லோக்பால் அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் 4 பேர் இதில் கையெழுத்திட்டுள்ளனர். செபி தலைவர் புச் தனது பதிலை நான்கு வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.

அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளிக்க,அவரை அழைப்பது பொருத்தமானது என்று நாங்கள் கருதுகிறோம். மூன்று புகார்களுக்கும் அவர் தனது பதில் அல்லது விளக்கத்தை புகார் வாரியாக சமர்ப்பிக்கலாம் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.  இந்த வழக்கு தொடர்பான விசாரணை அடுத்த மாதம் 19ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post முறைகேடு புகார்கள் செபி தலைவர் மாதபியிடம் விளக்கம் கேட்கிறது லோக்பால் appeared first on Dinakaran.

Read Entire Article