முருங்கைக்காய் விலை கிலோ ₹160க்கு விற்பனை

1 month ago 3

தர்மபுரி, டிச.13: தர்மபுரி மாவட்டத்தில் முருங்கைக்காய் ஒரே நாளில் ₹110 விலை சரிந்து, கிலோ ₹160க்கு விற்பனையானது. தர்மபுரி மாவட்டத்தில், பாலக்கோடு மற்றும் பாப்பாரப்பட்டி, அதகப்பாடி, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கம்பைநல்லூர், தொப்பூர், நல்லம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் வணிக நோக்கத்தில் நாட்டு முருங்கை சாகுபடி செய்துள்ளனர். தொடர் மழை மற்றும் பனிப்பொழிவின் காரணாக பூக்கள் உதிர்ந்ததால், பிஞ்சு பிடிப்பது குறைந்து, வெளியூர்களில் இருந்து கடந்த சில நாட்களாக தர்மபுரிக்கு முருங்கைக்காய் வரத்து குறைந்தது.கடந்த 5ம் தேதி தர்மபுரி உழவர் சந்தையில், முருக்கைக்காய் கிலோ ₹260 வரை விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன்தினம்(11ம் தேதி) ஒரு கிலோ முருங்கைக்காய் ₹270க்கு விற்பனையானது. இந்நிலையில், நேற்று திடீரென கிலோவுக்கு ₹110 வரை விலை சரிந்து, ஒரு கிலோ ₹160க்கு விற்பனை செய்யப்பட்டது. ஏற்கனவே தக்காளி விலை சரிந்து வருகிறது. நேற்று ஒரு கிலோ தக்காளி ₹20க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், முருங்கைக்காய் விலையும் சரிந்து வருவது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post முருங்கைக்காய் விலை கிலோ ₹160க்கு விற்பனை appeared first on Dinakaran.

Read Entire Article