முரசொலி செல்வம் மறைவுக்கு ரஜினி, கமல் இரங்கல்

8 months ago 34

முரசொலி செல்வம் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். ‘முரசொலி செல்வம் என்னுடைய நீண்ட கால நண்பர். அவரது மறைவு எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. முரசொலி செல்வத்தின் ஆத்மா சாந்தியடையட்டும், அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்’ இவ்வாறு ரஜினி கூறியுள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘திரைப்படத் துறையிலும் பங்களிப்பாற்றியவர். எல்லாவற்றுக்கும் மேலாக நட்புக்கு மரியாதை அளிக்கிற நல்ல மனிதர்’ இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.

The post முரசொலி செல்வம் மறைவுக்கு ரஜினி, கமல் இரங்கல் appeared first on Dinakaran.

Read Entire Article