முரசொலி செல்வம் மறைவு: கே.பாலகிருஷ்ணன், அன்புமணி இரங்கல்

3 months ago 19

சென்னை: முரசொலி செல்வம் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார். கலைஞருடன் பணியாற்றியதோடு 50 ஆண்டுக்கும் மேல் முரசொலி பத்திரிகைக்கு பங்களிப்பு செய்தவர். துணிச்சல்மிக்க எழுத்தாளர், கட்டுரையாளர், அதிர்ந்து பேசாத பண்பாளர்; பழகுவதற்கு இனிமையானவர். இத்தகைய முரசொலி செல்வம் மறைவு, திமுகவுக்கும், ஜனநாயக இயக்கத்திற்கும், பத்திரிகை உலகிற்கும் ஏற்பட்ட பேரிழப்பு என்று தெரிவித்தார். முரசொலி செல்வம் மறைவுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். முரசொலி மாறன் சகோதரரான முரசொலி செல்வம், கலைஞருக்கு அரசியலிலும், இதழியலிலும் துணையாக இருந்தவர். கலைஞர் மறைவுக்குப் பின் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கு ஆலோசனை வழங்கி வழிநடத்தியவர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முரசொலி செல்வத்தின் குடும்பத்தினர், திமுகவினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார்.

The post முரசொலி செல்வம் மறைவு: கே.பாலகிருஷ்ணன், அன்புமணி இரங்கல் appeared first on Dinakaran.

Read Entire Article