மும்பையில் கடல்வழி மேம்பாலத்தில் ஆபத்தான சாகசம் செய்த இந்தி பாடகர் மீது வழக்குப்பதிவு

6 hours ago 3


மும்பை: மும்பை பாந்த்ரா-ஓர்லி கடல்வழி மேம்பாலத்தில் நேற்று முன்தினம் ஒரு கார் நடுவழியில் நின்றது. அதிலிருந்து இறங்கிய ஒருவர் திடீரென மேம்பாலத்தின் தடுப்பு சுவரில் ஏறி ஆபத்தான முறையில் நின்று சாகசம் செய்தார். இதனை, அவருடன் சென்ற 2 பேர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். பின்னர் அவர்கள் காரை இயங்கி கொண்டு சென்றுவிட்டனர். இதற்கிடையே சாகச வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையறிந்த போலீசார், அந்த வீடியோவை ஆய்வு செய்து விசாரித்தபோது ஆபத்தான இந்த சாகசத்தில் ஈடுபட்டது இந்தி சினிமா பின்ணனி பாடகர் யாசர் தேசாய் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரையும் அவரது நண்பர்கள் 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். பாந்திரா-ஓர்லி கடல்வழி மேம்பாலத்தில் வாகனங்களை நடுவழியில் நிறுத்தவோ, இறங்கி ‘செல்பி’ எடுக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

The post மும்பையில் கடல்வழி மேம்பாலத்தில் ஆபத்தான சாகசம் செய்த இந்தி பாடகர் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Read Entire Article