மும்பையில் இருந்து புறப்பட்ட 3 சர்வதேச விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

3 months ago 14

மும்பை: மும்பையில் இருந்து நியூயார்க்கிற்குச் செல்லும் ஏர் இந்தியா விமானத்திற்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து அந்த விமானம் டெல்லிக்கு திருப்பி விடப்பட்டது. அங்கு விமானத்தில் இருந்த 258 பேரும் இறக்கிவிடப்பட்டனர். பாதுகாப்பு நடைமுறைகள் முடிந்த போது மிரட்டல் புரளி என்று தெரியவந்தது. இதையடுத்து விமானத்தின் பயண நேரம் மாற்றி அமைக்கப்பட்டது. இன்று காலை விமானம் டெல்லியில் இருந்து நியூயார்க் புறப்படும் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. இதே போல் மும்பையில் இருந்து புறப்பட்ட 2 இண்டிகோ விமானங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதில் ஒன்று மஸ்கட் செல்லும் விமானம் ஆகும். மற்றொன்று ஜெட்டாவிற்கு சென்றது.

* கொல்கத்தா விமானம் டெல்லிக்கு திரும்பியது

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கொல்கத்தாவுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் நேற்று காலை மீண்டும் டெல்லிக்கு திரும்பியது. விமானம் டெல்லியில் இருந்து புறப்பட்ட உடனே சக்கரத்தில் சிக்கல் உருவானதால் அவசரமாக மீண்டும் டெல்லியில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

The post மும்பையில் இருந்து புறப்பட்ட 3 சர்வதேச விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.

Read Entire Article