மும்பை படகு விபத்து: நிவாரணம் அறிவித்த பிரதமர் மோடி

4 months ago 22

மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பையின் கேட் ஆப் இந்தியா பகுதியில் நேற்று மாலை எலிபெண்டா தீவுக்கு பயணிகள் படகு சென்றுகொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் அதிவேகமாக வந்த கடற்படை படகு, பயணிகள் படகு மீது மோதியது.

இந்த கோர விபத்தில் பயணிகள் படகு கடலில் கவிழ்ந்தது. படகில் இருந்த பயணிகள் தண்ணீரில் விழுந்து தத்தளித்தனர். உடனடியாக விரைந்து வந்த கடலோர காவல் படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

கடலில் தத்தளித்த 99 பேர் உயிருடன் மீட்கப்படனர். ஆனால், இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், மும்பை படகு விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு பிரதமர் மோடி நிவாரண நிதி அறிவித்துள்ளார். அதன்படி, படகு விபத்தில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்ச ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அதேவேளை, காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதியாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

Read Entire Article