மும்பை: வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே சரிவுடன் காணப்பட்ட பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் 0.4% வரை சரிந்து முடிந்தன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 322 புள்ளிகள் சரிந்து 76,295 புள்ளிகளானது. வர்த்தக தொடக்கத்தில் 800 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி அடைந்து 75,807 புள்ளிக்கு சென்ற சென்செக்ஸ் உடனே மீண்டது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 17 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து விற்பனையாயின. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 82 புள்ளிகள் சரிந்து 23,250 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது.
The post மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 322 புள்ளிகள் சரிவு..!! appeared first on Dinakaran.