
மும்பை,
'புஷ்பா 2: தி ரூல்' படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு அல்லு அர்ஜுன், தமிழ் இயக்குனர் அட்லீயுடன் இணைந்துள்ளார். அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் முதல் படம் இதுவாகும். ஷாருக்கானின் 'ஜவான்' படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு அட்லீ இப்படத்தை இயக்க உள்ளதால் இதன் மீது அனைவரின் பார்வையும் உள்ளது.
இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இதற்கிடையில் அல்லு அர்ஜுன் மும்பைக்கு சென்றிருப்பது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
மும்பையின் பாந்த்ராவில் உள்ள மெஹ்பூப் ஸ்டுடியோவிற்கு அட்லீ படத்திற்கான லுக் டெஸ்டிற்காக அல்லு அர்ஜுன் சென்றதாக கூறப்படுகிறது. இருப்பினும், அதிகாரபூர்வமாக எதுவும் வெளியாகவில்லை.