மும்பை கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு

7 months ago 44

மும்பை: மும்பையின் செம்பூர் பகுதியில் சித்தார்த் காலனியில் உள்ள ஒரு கட்டிடத்தின் தரை தளத்தில் உள்ள ஒரு கடையில் நேற்று காலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பின்னர் முதல் தளத்தில் இருந்த குடியிருப்புகளுக்கும் தீ பரவியுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்புப் படையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். பின்னர் மேற்கொண்ட மீட்புப் பணியின்போது 3 சிறார்கள் உட்பட 7 பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article