
ஜெய்ப்பூர்,
ஐ.பி.எல். தொடரில் நேற்றிரவு நடந்த 50-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 217 ரன்கள் குவித்தது. மும்பை தரப்பில் ரிக்கெல்டன் 61 ரன்களும், ரோகித் 53 ரன்களும், சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்ட்யா தலா 48 ரன்களும் அடித்தனர்.பின்னர் 218 ரன் இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணி 16.1 ஓவர்களில் 117 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் மும்பை 100 ரன் வித்தியாசத்தில் மெகா வெற்றியை பெற்றது. ராஜஸ்தான் தரப்பில் ஆர்ச்சர் 30 ரன்கள் அடித்தார். மும்பை தரப்பில் டிரென்ட் பவுல்ட், கரண் ஷர்மா தலா 3 விக்கெட்டும், பும்ரா 2 விக்கெட்டும், தீபக் சாஹர், ஹர்திக் பாண்ட்யா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
ராஜஸ்தானுக்கு இது 8-வது தோல்வியாகும். இத்துடன் ராஜஸ்தானின் 'பிளே-ஆப்' கனவு சிதைந்தது.இந்த நிலையில் , தோல்வி தொடர்பாக பேசிய ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக் கூறியதாவது,
மும்பை அணி விளையாடிய விதத்திற்கு நாம் பாராட்டு தெரிவிக்க வேண்டும். எங்கள் பேட்டிங்கைப் பொறுத்தவரை இது எங்கள் நாள் அல்ல. 190-200 ரன்கள் சேஸ் செய்ய சிறந்ததாக இருந்திருக்கும், நாங்கள் சில விஷயங்களை சிறப்பாகச் செய்திருக்கலாம், நிறைய தவறுகளைச் செய்துள்ளோம், இனி தவறு செய்யக்கூடாது என்பதில் கவனம் செலுத்துவோம்.என தெரிவித்தார் .