காட்டுக்கே ராஜாவான சிங்கத்தை வைத்து இதுவரையில் 2 லயன் கிங் படங்கள் வந்துள்ளது. 1994 -ம் ஆண்டில் ஒன்றும், 2019-ம் ஆண்டில் மற்றொன்றும் வெளியானது. இந்த இரண்டிலும் ஒரே கதைதான். 1994-ம் ஆண்டு வெளிவந்தப் படம் கார்டூன் டெக்னாலஜியில் இருக்கும், 2019-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் புது டெக்னாலஜியான அனிமேஷன் தொழில்நுட்பத்தில் அமைந்து இருக்கும்.
லயன் கிங் படத்திற்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சிம்பாவை தூக்கி அனைத்து காட்டு விலங்களுக்கும் காட்டும் காட்சி இன்னும் சமூகவலைத்தளங்களில் வலம் வந்து கொண்டுதான் உள்ளது. பொறாமை, வஞ்சம், சூழ்ச்சி, போராட்டம், பந்தம் , காதல், தலைமை என அனைத்து குணாதிசயங்களை காட்டு விலங்குகளின் மூலம் காட்டி இருப்பது இப்படத்திற்கு கூடுதல் அம்சமாகும்.
இந்நிலையில், சூழ்ச்சியால் கொலை செய்யப்படும் சிம்பாவின் தந்தை முபாசா கடந்து வந்த பாதையை வைத்து உருவாகியுள்ளது முபாசா : தி லயன் கிங் படம். இந்த படத்தை பேரி ஜென்கின்ஸ் இயக்கியுள்ளார்.
அரச குடும்பத்தை சாராது, அனாதையாக வளர்ந்து தனக்கான ஆட்சியை உருவாக்கும் முபாசாவின் கதை மெய்சிலிர்க்க வைக்கிறது. தற்பொழுது படத்தின் இறுதி டிரெய்லர் தமிழில் வெளியாகியுள்ளது. இப்படம் வருகிற டிசம்பர் மாதம் 20-ந் தேதி உலகளவில் வெளியாக உள்ளது. தமிழ் மொழிக்கான டப்பிங்கை அர்ஜுன் தாஸ், அசோக் செல்வன், சிங்கம் புலி, ரோபோ சங்கர், விக்னேஷ், நாசர் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.