'முபாசா: தி லயன் கிங்' : உலக அளவில் ரூ.3,200 கோடி வசூல் சாதனை

6 months ago 20

காட்டுக்கே ராஜாவான சிங்கத்தை வைத்து இதுவரையில் 2 படங்கள் வந்துள்ளன. 1994 மற்றும் 2019-ம் ஆண்டில் 'தி லயன் கிங்' என்ற பெயரில் வெளியாகின. இந்த லயன் கிங் படத்திற்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. காட்டு விலங்களுக்கு இடையே உள்ள பொறாமை, வஞ்சம், சூழ்ச்சி, போராட்டம், பந்தம் , காதல், தலைமை என அனைத்து குணாதிசயங்களை காட்டி இருப்பது இப்படத்திற்கு கூடுதல் அம்சமாகும்.

இந்நிலையில், பேரி ஜென்கின்ஸ் இயக்கத்தில் பிரம்மாண்டமான பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் முபாசா : தி லயன் கிங் . இப்படம் கடந்த 20-ந் தேதி வெளியானது. இந்த படத்தில் முபாசா கதாபாத்திரத்திற்கு அர்ஜுன் தாஸ் குரல் கொடுத்திருந்தார். மேலும் அசோக் செல்வன், நாசர், விடிவி கணேஷ், சிங்கம் புலி, ரோபோ ஷங்கர் என பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களுக்கு குரல் கொடுத்திருந்தனர். இந்தியில் ஷாருக்கானும், தெலுங்கில் மகேஷ் பாபுவும் குரல் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் சூழ்ச்சியால் கொலை செய்யப்படும் சிம்பாவின் தந்தை முபாசா கடந்து வந்த பாதையை வைத்து உருவாகியுள்ளது. அரச குடும்பத்தை சாராது, அனாதையாக வளர்ந்து தனக்கான ஆட்சியை உருவாக்கும் முபாசாவின் கதை மெய்சிலிர்க்க வைக்கிறது.

இந்த நிலையில், இப்படம் உலக அளவில் ரூ.3,200 கோடி வசூல் செய்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் மட்டும் 16 நாட்களில் சுமார் ரூ.150 கோடி வசூலித்துள்ளது. குறிப்பாக தமிழ் நாட்டில் மட்டும் ரூ.23 கோடி வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

Read Entire Article