முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் இலவச தொழிற்பயிற்சி பெற வாய்ப்பு

4 weeks ago 9

 

திருப்பூர், டிச. 20: திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது: முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கான நான் முதல்வன் திட்டத்தின் முலம் தமிழ்நாடு திறன் மேம்பாடு கழகம் பல்வேறு விதமான இலவசமாக தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் 18 வயது முதல் 35 வயது நிரம்பியவர்கள் பயிற்சியில் கலந்துகொள்ளலாம்.

கல்வி தகுதி 5ம் வகுப்பு முதல் டிகிரி முடித்தவர்கள் வரை விண்ணப்பித்து பயன்பெறலாம். முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கான நான் முதல்வன் பினிசிங் ஸ்கூல் திட்டத்தின் முலம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் எலக்ட்ரிசீயன், வயர்மேன், கம்யூட்டர் ஆபரேட்டர் உள்பட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.

இதில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் இந்த பயிற்சியில் கலந்துகொண்டு பயன்பெறலாம். பயிற்சியில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் திருப்பூர் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் நல அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம். மேலும், 0421 2971127 என்ற எண்ணையும் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டது. மலைவாழ் மக்களுக்கு வருமானம் கிடைத்ததுடன், சுற்றுலா பயணிகளுக்கும் சிறந்த பொழுதுபோக்காக இருந்தது.

The post முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் இலவச தொழிற்பயிற்சி பெற வாய்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article