
மும்பை,
மும்பை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான பத்மகர் ஷிவல்கர் (வயது 84) உடல் நலக்குறைவு காரணமாக நேற்று மரணமடைந்தார். இவருக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளது.
இடது கை சுழற்பந்து வீச்சாளரான அவர் 124 முதல் தர போட்டிகளில் விளையாடி 589 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இவரது சிறந்த செயல்பாடுகளில் ஒன்று 1972-73 ரஞ்சி சீசனின் இறுதிப்போட்டியில் 13 விக்கெட்டுகள் (2 இன்னிங்சிலும் சேர்த்து) வீழ்த்தி மும்பை கோப்பையை வெல்வதில் முக்கிய பங்காற்றினார்.
சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட விட்டாலும், உள்நாட்டு போட்டிகளில் இவரது பங்களிப்பை போற்றும் விதமாக இவருக்கு கடந்த 2017-ம் ஆண்டு பி.சி.சி.ஐ., சி.கே.நாயுடு வாழ்நாள் விருது வழங்கி கவுரவித்தது.