தூத்துக்குடி : மாப்பிள்ளையூரணியில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவையொட்டி மாட்டுவண்டி போட்டியை சண்முகையா எம்எல்ஏ கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணியில் முத்துராமலிங்க தேவர் 117வது ஜெயந்தி விழா மற்றும் 62வது குருபூஜை விழாவையொட்டி 4ம் ஆண்டு மாட்டு வண்டி எல்கை போட்டி நடந்தது. சண்முகையா எம்.எல்.ஏ தலைமை வகித்து போட்டிகளை தொடங்கி வைத்தார். தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவருமான சரவணக்குமார், திமுக மாவட்ட பிரதிநிதி சப்பாணிமுத்து, தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி முன்னிலை வகித்தனர்.
டேவிஸ்புரம் முதல் 8 மைல் தூரம் நடுமாடு 11 ஜோடி, 6 மைல் தூரம் சின்னமாடு 21 ஜோடி, 5 மைல் தூரம் பூஞ்சிட்டு 50 ஜோடி என மாட்டுவண்டி எல்கை போட்டி நடந்தது.
நடுமாடு போட்டியில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளுக்கு முதல் பாிசாக ரூ30 ஆயிரத்தை மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார், இரண்டாவது பாிசு ரூ. 25ஆயிரம் தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, 3வது பாிசு ரூ.15 ஆயிரம் திமுக ஓன்றிய துணைச்செயலாளர் கணேசன், 4ம் பரிசு ரூ.10 ஆயிரம் முத்துபாண்டி, சின்னமாடு போட்டியில் முதல்பரிசு ரூ.20ஆயிரம் திருநாவுக்கரசு, 2ம் பரிசு ரூ.15 ஆயிரம் காங்கிரஸ் வடக்கு மண்டலத்தலைவர் சின்னக்காளை, 3ம் பரிசு ரூ.10 ஆயிரம் நட்டார், 4ம் பரிசு ரூ. 7 ஆயிரம் மாரியப்பன் ஆகியோர் வழங்கினர்.
பூஞ்சிட்டு போட்டியில் முதல்பரிசு ரூ.15 ஆயிரம் சுரேஷ், 2ம் பரிசாக ரூ.10ஆயிரம் ஓன்றிய திமுக சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ராஜேந்திரன், ஓன்றிய திமுக துணைச்செயலாளர் ராமசந்திரன், 3ம் பரிசு ரூ. 8 ஆயிரம் காளிமுத்து, 4ம் பரிசு ரூ.5 ஆயிரம் அன்புராஜ், கொடி பாிசாக தலா ஆயிரம் வீதம் வீரமணி, கருப்பசாமி, முத்துச்சாமி ஆகியோர் வழங்கினர்.
விழாவில் துணை அமைப்பாளர்கள் ஜீவா என்ற பாலமுருகன், சதீஷ், மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் அந்தோணி தனுஷ்பாலன், மாவட்ட வா்த்தக அணி துணை அமைப்பாளர் பிளோமின்ராஜ், மாவட்ட பிரதிநிதிகள், கிளை செயலாளர்கள், தமிழ்நாடு தேவர் பேரவை மற்றும் ஊர் ெபாதுமக்கள் ரேக்ளா கமிட்டியாளர்கள் சந்தனகுமார், பொன்ராஜ், பொியசாமி, ராஜா, சுடலைமணி, மணிகண்டன், முத்துபாண்டி, பச்சைபெருமாள், பாலசுரேஷ், உத்திரபாண்டியன், மாாிமுத்து, முத்துக்குமாா், மற்றும் கப்பிகுளம் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மாப்பிள்ளையூரணியில் மாட்டு வண்டி போட்டி appeared first on Dinakaran.