முத்துமாரியம்மன் கோயிலில் ₹2 லட்சம் நகை திருட்டு

5 hours ago 1

திருக்கோவிலூர், பிப். 13: திருக்கோவிலூர் அருகே அம்மன் கோயிலில் ₹2 லட்சம் மதிப்புள்ள நகை, கோயில் உண்டியல் பணம் திருடப்பட்டுள்ளது. திருக்கோவிலூர் அடுத்த இரும்பலங்குறிச்சி கிராமத்தில் முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் பணிபுரிந்து வந்த பாலமுருகன் என்பவர் நேற்று காலை கோயிலுக்கு வந்து பார்த்துள்ளார். அப்போது கோயில் கதவுகள் திறந்தப்பட்ட நிலையில் இருந்ததால் சந்தேகம் அடைந்த அவர் கோயில் உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது முத்துமாரியம்மனின் கழுத்தில் இருந்த ₹2 லட்சம் மதிப்புள்ள 4 பவுன் நகை மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து திருப்பாலபந்தல் போலீசாருக்கு பாலமுருகன் தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த காவல் உதவி ஆய்வாளர் சலாம் உசேன் தீவிர விசாரணை நடத்தினார். அதில் நேற்று முன்தினம் நள்ளிரவு மர்ம நபர்கள் கோயிலின் பூட்டை கள்ள சாவி போட்டு திறந்து அம்மன் கழுத்தில் இருந்த நகையையும், உண்டியலையும் உடைத்து திருடி சென்றது தெரிய வந்தது. பெயர்த்து எடுத்த கோயில் உண்டியலை அங்குள்ள உள்ள விவசாய நிலத்தில் வைத்து உடைத்து அதில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு உண்டியலை மட்டும் அங்கேயே வீசி விட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து பாலமுருகன் திருப்பாலை பந்தல் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

The post முத்துமாரியம்மன் கோயிலில் ₹2 லட்சம் நகை திருட்டு appeared first on Dinakaran.

Read Entire Article