ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே முத்துசங்கிலிபட்டி கிராமத்தில் சேதமடைந்து ஆபத்தான நிலையில் காட்சியளிக்கும் அங்கன்வாடி மைய கட்டிடத்தை உடனடியாக சீரமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஒன்றியத்தில் அமைந்துள்ள முத்துச்சங்கிலிபட்டி கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையசுமார் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் 20 ஆண்டுகள் பழமையான இந்த அங்கன்வாடி மைய கட்டிடம் கொஞ்சம் கொஞ்சமாக சேதமடைந்து தற்போது மிகவும் ஆபத்தான நிலையில் காட்சியளிக்கிறது.
கட்டிடத்தின் நுழைவு பகுதி சுற்றுச்சுவர் பகுதி உள்புறத்தின் மேல்சுவர் பகுதி, ஜன்னல் பகுதி என பல்வேறு இடங்களில் விரிசல்கள் காணப்படுவதோடு வெளிப்புற சன் சைடு சுவரும் சில வாரங்களுக்கு முன்பு இடிந்து விழுந்துள்ளது. இதனால் குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்பும் பெற்றோர் நாள்தோறும் மிகுந்த அச்சத்தோடு அனுப்புவதாக கூறுகின்றனர். ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு உடனடியாக இந்த அங்கன்வாடி மைய கட்டிடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post முத்துசங்கிலிபட்டி கிராமத்தில் சேதமடைந்த அங்கன்வாடி மைய கட்டிடம் புத்துயிர் பெறுமா? appeared first on Dinakaran.