முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசையில் தனியார் மருத்துவர்கள் அதிக இடம்

3 months ago 16

சென்னை: முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலில் அதிக அளவில் இடம் பெற்று தனியார் மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். ஆண்டுதோறும் காலி பணியிடங்களை முறையாக நிரப்பாததால் அரசு மருத்துவர்கள் பின்தங்கியுள்ளனர். தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்டி, எம்எஸ் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு கடந்த செப்டம்பர் 20-ம் தேதி தொடங்கி நடந்துவருகிறது.

தகுதியான மாணவர்களின் தரவரிசை பட்டியல்கள் https://tnmedicalselection.net/ என்ற சுகாதாரத் துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசை பட்டியலில் மொத்தம் 7,971 பேர் இடம் பெற்றுள்ளனர். இதில் முதல் 1,000 பேரில் 68 பேர், அடுத்த ஆயிரம் பேரில் 67 பேர் உட்பட 1,025 அரசு மருத்துவர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். மற்ற அனைவரும் அரசுசாரா தனியார் மருத்துவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, நிர்வாக ஒதுக்கீட்டு தரவரிசை பட்டியலில் 3,958 பேர் இடம் பெற்று உள்ளனர். கலந்தாய்வு விரைவில் தொடங்கவுள்ளது.

Read Entire Article