நெல்லை: தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே சுந்தரபாண்டியபுரம் அடுத்த கீழபட்டாகுறிச்சியில் செயல்பட்ட அன்னை முதியோர் காப்பகத்தில் கடந்த 11ம் தேதி உணவு சாப்பிட்டவர்களில் சங்கர்கணேஷ் (48), முருகம்மாள் (55), அம்பிகா (40) ஆகிய 3 பேர் கடந்த 12ம் தேதியும், தென்காசி அரசு மருத்துவமனையில் தனலட்சுமி (70) என்பவர் கடந்த 13ம் தேதியும் இறந்தனர். மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட 12 பேரில், கடந்த 17ம் தேதி இடைகால் பகுதியைச் சேர்ந்த முப்பிடாதி (50) உயிரிழந்தார்.
8 பேர் உடல் நிலை தேறிய நிலையில் 3 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, மூப்பன்பட்டியைச் சேர்ந்த செல்வராஜ் (74) நேற்று இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஏற்கனவே போலீசார் அந்த காப்பகத்தை சீல் வைத்து, காப்பக உரிமையாளரை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
The post முதியோர் காப்பக பலி 6 ஆக உயர்வு appeared first on Dinakaran.