முதியவர் மீது சரமாரி தாக்குதல் போலீசார் விசாரணை

2 months ago 9

 

புதுச்சேரி, பிப். 25: புதுச்சேரி உப்பளம் நேதாஜி நகரை சேர்ந்தவர் பெஞ்சமின் (72). கடந்த 1995ம் ஆண்டு பெஞ்சமின், அவரது அக்கா அதேல் மற்றும் தம்பி நெஸ்தோர் ஆகியோர் இணைந்து வீடு கட்டினர். அப்போது வீட்டை நெஸ்தோர் பெயரில் எழுதி வைத்து விட்டு, பெஞ்சமின், அதேல் ஆகியோர் தங்கள் காலம் வரை இதே வீட்டில் இருந்து கொள்ளலாம் என்று எழுதி கொடுத்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து ெநஸ்தோர் வெளிநாட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

பெஞ்சமின், அதேல் ஆகியோர் உப்பளத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டு ெநஸ்தோர் மற்றும் அவரது மகள் ஆலியாத், மகன் ஆல்பர்ட் ஆகியோர் புதுவைக்கு வந்தனர். அப்போது நெஸ்தோர் மற்றும் அதேல் ஆகியோர் இடையே தகராறு ஏற்பட்டதால் ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதனிடையே பெஞ்சமின் வீட்டுக்கு நேற்று முன்தினம் நெஸ்தோர் சென்று மின் கட்டணம் ரசீது கேட்டு தகாத வார்த்தையால் திட்டி, வீட்டை காலி செய்யுமாறு கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது அங்கு வந்த நெஸ்தோரின் மகன் ஆல்பர்ட், பெஞ்சமினை அடித்து, கொலை மிரட்டல் விடுத்து, வீட்டை விட்டு வெளியே தள்ளி விட்டாராம். பின்னர் பெஞ்சமின் புதுச்சேரி அரசு பொதுமருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று, இச்சம்பவம் குறித்து ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார்,அவர்கள் 3 பேர் மீது வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post முதியவர் மீது சரமாரி தாக்குதல் போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Read Entire Article