முதியவரை அடித்துக்கொன்ற புலி - அதிர்ச்சி சம்பவம்

13 hours ago 1

போபால்,

மத்தியபிரதேச மாநிலம் பலஹட் மாவட்டம் கண்ட்வா கிராமத்தை சேர்ந்த முதியவர் பிரகாஷ் பனி (வயது 50). இவர் இன்று காலை அதிகாலை 5 மணியளவில் தனது தோட்டத்திற்கு சென்றுள்ளார். அங்கு விவசாய பணி செய்துகொண்டிருந்த பிரகாசை புலி தாக்கியது.

பிரகாசின் தலை, கழுத்து, முதுகு பகுதியில் புலி தாக்கியது. இதில் படுகாயமடைந்த பிரகாஷ் கதறியுள்ளார். அப்போது கிராமத்தை சேர்ந்த சிலர் விரைந்து வந்து கற்கள், கட்டைகளை கொண்டு புலியை விரட்டியடித்தனர். மேலும், படுகாயமடைந்த பிரகாசை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பிரகாசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேவேளை, புலியை பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி கிராம மக்கள் திடீர் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. 

Read Entire Article