சென்னை: 'முதல்வர் ஸ்டாலினுக்கு தேர்தல் ஜுரம் வந்துவிட்டது' என்று கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தென் சென்னை வடக்கு (மே) மாவட்ட அதிமுக செயலாளர் தி.நகர் சத்யா ஏற்பாட்டில் தியாக ராயநகர், முத்துரங்கன் சாலையில் நேற்று பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி பங்கேற்று பேசியதாவது: தமிழகத்தில் திமுக அரசும், முதல்வர் ஸ்டாலினும் கடந்த 4 ஆண்டு ஆட்சியில் எந்த ஒரு பெரிய திட்டத்தையும் கொண்டு வரவில்லை. இந்த ஆட்சியில் அவரது மகன் உதயநிதியை துணை முதல்வராக்கியது மட்டும்தான் மிகப்பெரிய சாதனை. தங்கள் குடும்ப உறுப்பினர்கள் ஆட்சி அதிகாரத்தில் தொடர வேண்டும் என்பதே ஸ்டாலினின் நோக்கம்.