முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

3 hours ago 1

சென்னை: காந்தியின் 78வது நினைவு நாளை ஒட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை, தலைமை செயலகத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், தலைமை செயலாளர் முருகானந்தம், ஐஏஎஸ் அதிகாரிகள், தலைமை செயலக ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். முதல்வர் படித்த உறுதிமொழி விவரம்: இந்திய அரசியமைப்பின்பால் இடைவிடாத, உளமார்ந்த பற்றுள்ள இந்திய குடிமகன் / குடிமகள் ஆகிய நான் அரசியலமைப்பின்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது என்பதை அறிவேன்.

தீண்டாமையை அடிப்படையாக கொண்டு எவர்மீதும் தெரிந்தோ, தெரியாமலோ சமூக வேற்றுமையை மனம், வாக்கு, செயல் என்ற எந்த வகையிலும் கடைபிடிக்க மாட்டேன் என்று உளமார உறுதியளிக்கிறேன். அரசியலமைப்பின் அடிப்படை கருத்திற்கிணங்க, சமூக வேறுபாடற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையுடனும், உண்மையுடனும் பணியாற்றுவது எனது கடமையாகும் என்பதையும் உணர்வேன். இந்திய அரசியமைப்பின்பால் எனக்குள்ள முழுப்பற்றிற்கு இது என்றென்றும் எடுத்துக்காட்டாக விளங்குமென்றும் இதனால் உளமாற உறுதி அளிக்கிறேன்.

The post முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு appeared first on Dinakaran.

Read Entire Article