சென்னை: திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சார்பு அணிச் செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் இன்று(சனிக்கிழமை) மாலை 6 மணி அளவில் காணொலி காட்சி மூலம் நடைபெறும்.
அதுபோது, மாவட்ட செயலாளர்கள், நாடளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சார்பு அணிச் செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுபடி கேட்டுக் கொள்கிறேன். இக்கூட்ட்ததில், ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை குறித்து விவாதிக்கப்படும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
The post முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு appeared first on Dinakaran.