சென்னை: முதல்வர் மருந்தகம் அமைக்கும் பணிக்காக பயிற்சிகள் நேற்று தொடங்கின. இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன் வெளியிட்ட அறிக்கை: மக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கும் வகையில் தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் முதற்கட்டமாக முதல்வர் மருந்தகங்கள் 1000 இடங்களில் துவக்க தமிழ்நாடு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து, தொழில் முனைவோர்களிடமிருந்து 638 விண்ணப்பங்களும் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களிடமிருந்து 490 விண்ணப்பங்களும் ஆக, மொத்தம் 1128 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. பரிசீலனை செய்யப்பட்டு தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு ₹1.50 லட்சம் முதற்கட்ட அரசு மானியமாக விடுவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் மருந்தகம் விண்ணப்பித்துள்ள தகுதியான தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களுக்கு மூன்று கட்டங்களாக பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. மேலும், கூட்டுறவுச் சங்கங்கள் நடத்தும் மருந்தகங்களுக்கு நேரடியாக சென்று களப்பயிற்சி வழங்கப்படும். பின்னர், விண்ணப்பித்த தகுதியான தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவுச் சங்க மருந்தாளுனர்களுக்கும் சென்னையில் நேரடியாக பயிற்சி வழங்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post முதல்வர் மருந்தகம் அமைக்கும் பணிக்கான பயிற்சி துவக்கம் appeared first on Dinakaran.