முதல் மனைவி இருக்கும்போதே வேறு பெண்ணுடன் ரகசியமாக குடித்தனம் நடத்திய கணவர்:  நேரில் பார்த்ததால் மனைவி அதிர்ச்சி மாத்திரை தின்று *தற்கொலை முயற்சி

8 hours ago 1

அண்ணாநகர்: அரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் முரளி (53). இவரது மனைவி தேவி (48). இவர்கள் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2024ம் ஆண்டு பிரிந்துள்ளனர். இதன்பிறகு வடபழனி பகுதியில் முரளியும்அரும்பாக்கம் பகுதியில் தேவியும் வசிக்கின்றனர். இந்தநிலையில்தேவி கணவருடன் சேர்ந்து வாழ்வதற்காக பலமுறை முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை. இறுதியாக கணவரிடம் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கடந்த 3ம் தேதி வடபழனிக்கு சென்றுள்ளார். அப்போது முரளி வேறு ஒரு பெண்ணுடன் இருப்பது பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனால் கோபமடைந்த முரளி‘என் அனுமதியில்லாமல் எதற்காக என் வீட்டுக்கு வந்தாய்,’ என்று கேட்டு வாக்குவாதம் செய்துஅவரை சரமாரியாக தாக்கி விரட்டியடித்துள்ளார். இதனால் விரக்தியுடன் வீடு திரும்பிய தேவி25 மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அப்போதுதேவியின் தங்கை தேவியை செல்போனில் தொடர்புகொண்டபோதுநீண்ட நேரம் போனை எடுக்கவில்லை என்றதால்உடனடியாக நேரில் வீட்டுக்கு வந்து பார்த்த போதுதேவி மயங்கி கிடந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டுள்ளார். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு நலமாக உள்ளார். தகவலறிந்து வந்த அரும்பாக்கம் போலீசார்தேவியிடம் விசாரணை நடத்தினர். அப்போது தேவி கூறியதாவது:முரளியுடன் கடந்த 8 வருடத்துக்கு முன் திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வந்தோம். இதன்பிறகு கணவரிடம் சேர்ந்து வாழ பலமுறை முயற்சி செய்தும் முடியவில்லை. அப்போதுதான் அவர் வேறு ஒரு பெண்ணுடன் வாழ்ந்துகொண்டு அவரை திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தார். இதனால் மனவேதனையில் மாத்திரைகளை தின்று தற்கொலை செய்துகொள்ள முயன்றேன். எனவேஎனது கணவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். இதன் அடிப்படையில்போலீசார் வழக்குபதிவு செய்து முரளியை இன்று காலை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

The post முதல் மனைவி இருக்கும்போதே வேறு பெண்ணுடன் ரகசியமாக குடித்தனம் நடத்திய கணவர்:  நேரில் பார்த்ததால் மனைவி அதிர்ச்சி மாத்திரை தின்று *தற்கொலை முயற்சி appeared first on Dinakaran.

Read Entire Article