முதல் தோல்வி படம் கொடுத்தபோது...மனம் திறந்த சாய்பல்லவி, சிவகார்த்திகேயன்

6 months ago 17

சென்னை,

இயக்குனர் ராஜ்குமார் பெரிய சாமி இயக்கத்தில் கடந்த மாதம் 31-ம் தேதி தீபாவளியன்று வெளியான படம் அமரன். மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவான இப்படத்தில் முகுந்தாக சிவகார்த்திகேயனும், மனைவி இந்து ரெபேக்காவாக சாய்பல்லவியும் நடித்தனர்.

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் இதுவரை ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தின் வெற்றியைத்தொடர்ந்து, அமரன் படக்குழு நேர்காண ல் ஒன்றில் கலந்துகொண்டது. அப்போது சாய்பல்லவி மற்றும் சிவகார்த்திகேயன், முதல் தோல்வி படத்தை கொடுத்தபோது ஏற்பட்ட உணர்வை பற்றி பேசியுள்ளனர்.

இது குறித்து சாய்பல்லவி கூறுகையில்,

'நாம் எப்போதும் ரசிகர்களை ஏமாற்றக்கூடாது என்றுதான் நினைப்போம். ஒருவேளை தோல்வி படத்தை கொடுத்தால் இந்த அன்பு போய்விடுமோ என்றும் எண்ணுவோம். அந்த பயம் எனக்கும் இருந்தது. ஆனால், ரசிகர்கள் நம்மை மன்னிக்கிறார்கள்' என்றார்.

அதனைத்தொடர்ந்து பேசிய சிவகார்த்திகேயன், எனக்கு முதல் தோல்வி வரும் வரை ஒவ்வொரு படத்திலும் அந்த பயம் இருந்தது. ஆனால், அதிர்ஷ்டவசமாக மக்களின் அன்பின் காரணமாக, முதல் ஏழு, எட்டு படங்கள் நன்றாக அமைந்தன. இதனால், முதல் தோல்வி என்னை பெரிதாக பாதிக்கவில்லை. ரசிகர்கள் வெற்றிகளை நினைவில் கொள்கிறார்கள், வெறுப்பவர்கள் தோல்விகளை நினைவில் கொள்கிறார்கள். சில சமயங்களில் நாம் வெறுப்பவர்களையும் மகிழ்ச்சியடைய செய்ய வேண்டும்' என்றார்.


Read Entire Article