முதல் டெஸ்ட்; வங்காளதேசம் - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்

7 months ago 25

ஆண்டிகுவா,

வங்காளதேச கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இதில் முதலில் டெஸ்ட் தொடரும், அதனை தொடர்ந்து ஒருநாள் மற்றும் டி20 தொடர்களும் நடைபெற உள்ளன.

அதன்படி இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. இந்த போட்டி ஆண்டிகுவாவில் நடைபெற உள்ளது/ இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் என்பதால் இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

அதன் காரணமாக இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும். இதனால் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

Read Entire Article