முதல் ஒருநாள் போட்டி: பாகிஸ்தான் - நியூசிலாந்து நாளை மோதல்

2 days ago 2

நேப்பியர்,

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை நியூசிலாந்து 4-1 என்ற கனக்கில் கைப்பற்றி விட்டது.

அடுத்ததாக இவ்விரு அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. இதன் முதலாவது ஆட்டம் நாளை இந்திய நேரப்படி அதிகாலை 3.30 மணியளவில் நேப்பியரில் நடைபெற உள்ளது.

டி20 தொடரில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் முயற்சிக்கும். மறுபுறம் சொந்த மண்ணில் ஒருநாள் தொடரை வெல்ல நியூசிலாந்து முயற்சிக்கும் என்பதால் இந்த ஆட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read Entire Article