முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எப்போதும் ஆதாரமில்லாமல் பேசமாட்டார்: கனிமொழி

1 month ago 5

சென்னை,

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா நாயக்கர்பட்டி கிராமத்தில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைப்பதற்கான உரிமத்தை ரத்து செய்யக்கோரும் தீர்மானம் தமிழக சட்டசபையில் நேற்று ஒருமனதாக நிறைவேறியது. அப்போது பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நான் பொறுப்பில் இருக்கும்வரை `டங்ஸ்டன்' சுரங்கம் அமையாது என்று உறுதிப்பட தெரிவித்தார்.

இந்த நிலையில், டங்ஸ்டன் விவகாரம் தொடர்பாக அதிமுகவை மீது திமுக எம்.பி.கனிமொழி கடுமையாக சாடியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,

"மணிப்பூர் பற்றிய விவாதத்தை நடத்த வேண்டும் என்றும், இந்த கனிம வள மசோதாவே அதானிக்காக இந்நாட்டின் கனிம வளங்களை வாரிக்கொடுக்கும் முயற்சி என்றும், 28.07.2023 அன்றே நாங்கள் இதை எதிர்த்துப் போராடினோம். டங்ஸ்டன் உள்ளிட்ட "பகுதி-டி" கனிமங்களுக்கு உரிமம் வழங்கும் அதிகாரத்தை மத்திய அரசு கட்டுப்பாட்டில் கொண்டுவந்த இந்த மசோதாவை மாநிலங்களவையில் அ.தி.மு.க. ஆதரிக்காமல் இருந்திருந்தால் இன்று டங்ஸ்டன் விவகாரமே வந்திருக்காது.

திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த மசோதாவை எதிர்த்துப் போராடியது இந்த காணொளியில் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எப்போதும் ஆதாரமில்லாமல் பேசமாட்டார். தொடர்ந்து மக்களை ஏமாற்றுவதற்காக மாற்றி மாற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி" என்று தெரிவித்துள்ளார்.

Read Entire Article