முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார்

2 hours ago 3

சென்னை,

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மரணம் அடைந்தார். இதையடுத்து, இந்த தொகுதிக்கு அடுத்த மாதம் 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நேற்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. வேட்புமனு தாக்கலுக்கு 17ம் தேதி கடைசி நாளாகும்.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். அதன்படி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வி.சி.சந்திரகுமார் போட்டியிடுவார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் , திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் , முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் . இந்த சந்திப்பின்போது அமைச்சர்கள் துரைமுருகன் , கே.என்.நேரு , பொன்முடி , முத்துசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

Read Entire Article