முதல்-அமைச்சர் திறனாய்வு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

2 months ago 13

சென்னை,

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட்ட திறனாய்வு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட உள்ளது.

மாணவர்களின் திறனை கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் முதல்-அமைச்சர் திறனாய்வு தேர்வு கடந்த ஆக.,4ம் தேதி நடைபெற்றது. இதில் 1,03,756 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.

இதிலிருந்து ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாதம் ரூ.1000 என ஆண்டுக்கு ரூ.10,000 தமிழக அரசால் வழங்கப்படுகிறது.

இத்தேர்வு முடிவுகள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று வெளியிடப்படுகிறது. மாணவர்கள், 'Tamil Nadu Chief Minister's Talent Search Examination result 2024' என்ற பக்கத்திற்கு சென்று பதிவு எண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article