முதன்முறையாக அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் சிவகார்த்திகேயன் படம்

2 months ago 13

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது 'அமரன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இது சிவகார்த்திகேயனின் 21-வது படமாகும். இந்த படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். இதில் நடிகை சாய் பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் இந்த படத்தில் 'முகுந்தன்' என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். புவன் அரோரா, சுரேஷ் சக்கரவர்த்தி, ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். 'அமரன்' திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தின் டீசரும், டிரெய்லரும் ஏற்கனவே வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது.

சமீபத்தில் இந்த படத்திற்கான டிக்கெட் முன்பதிவுகளும் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டிக்கெட் முன்பதிவில் வசூலை வாரி குவித்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களை விட அமரன் திரைப்படம் அதிக வசூலை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தநிலையில் இந்த படம் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 800 திரையரங்குகளில் வெளியாவதாக படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இன்னும் அதிகமாக வாய்ப்பிருக்கிறது. சிவகார்த்திகேயனின் எந்த படமும் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான திரையரங்குகளில் இந்த படம் வெளியாகிறது என்று தெரிவித்துள்ளார்.

Read Entire Article