முட்டம் கே.எம்.எம்.சி. மருத்துவக்கல்லூரியில் ஒயிட் கோட் அணிவிக்கும் நிகழ்ச்சி

7 months ago 19

 

குளச்சல்,நவ.11: முட்டம் கே.எம்.எம்.சி. மருத்துவக்கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான ஒயிட் கோட் அணிவிக்கும் நிகழ்ச்சி நிறுவனர் அருட்தந்தை அருள்ராஜ் தலைமையில் நடந்தது. இயக்குனர் சுரேந்திரா வரவேற்று பேசினார். தூய ஜோசப் பல்கலைக்கழக துணை வேந்தர் முனைவர் சுப்பையா பாரதி முதலாமாண்டு மாணவர்களை வாழ்த்தி பேசினார். முதுநிலை பேராசிரியர்கள் மற்றும் மருத்துவர்கள் மாணவ,மாணவிகளுக்கு ஒயிட் கோட் அணிவித்தனர்.

கல்லூரி டீன் மோகன் மாணவர்களுக்கான ஹிபோகிரேட்டிக் உறுதிமொழி எடுக்க செய்து நிறைவுரை ஆற்றினார்.நிகழ்ச்சிகளில் இயக்குனர்கள் ராஜேந்திரன்,அழகேசன்,துணை இயக்குனர் டாக்டர் சகாய ஜோஸ்,அருட்சகோதரிகள் சேவியர் செல்வி,பாஸ்கல், துணை முதல்வர் டாக்டர் அசோக் குமார், அருட்தந்தை புஷ்பராஜ் மற்றும் டி.எம்.ஐ. அருட்சகோதரிகள், எம்.எம்.ஐ. அருட்தந்தையர்கள், மருத்துவர்கள்,செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post முட்டம் கே.எம்.எம்.சி. மருத்துவக்கல்லூரியில் ஒயிட் கோட் அணிவிக்கும் நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Read Entire Article