தூத்துக்குடி, டிச. 17: வரும் ஆண்டிலும் தற்போதுள்ள முடி திருத்தும் கட்டணத்தையே தொடர்வது என்று மாவட்ட மருத்துவர் மற்றும் முடி திருத்துவோர் சங்கம் முடிவு செய்துள்ளது. தூத்துக்குடி மாவட்ட மருத்துவர் மற்றும் முடி திருத்துவோர் சங்கம் கூட்டம் நடைபெற்றது. தலைவர் டென்சிங் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் ரசல் வாழ்த்தி பேசினார். சங்க பொதுச் செயலாளர் நாகராஜ், வேலை அறிக்கை தாக்கல் செய்தார். மாவட்ட பொருளாளர் வேல்முருகன் நன்றி கூறினார். துணை தலைவர் ஞானசேகர், துணை செயலாளர்கள் முருகன், கருணாமூர்த்தி, நிர்வாகிகள் திருமணி, மாரிமுத்து மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வரும் ஆண்டிலும் தற்போதுள்ள முடி திருத்தும் கட்டணத்தையே தொடர்வது என்றும், முடிதிருத்தும் நிலையம், பெண்கள் அழகு நிலையம் தொழிலாளர்களுக்கு வீட்டு மனைப்பட்டா அல்லது தொகுப்பு வீடு வழங்கிடவும், நலவாரியம் அலுவலகம் மூலம் கடைகளுக்கு தொழில் உபகரணங்கள் வழங்கிட வேண்டும். முடிதிருத்தும் மற்றும் பெண்கள் அழகுநிலைய உறுப்பினர்கள் அனைவரையும் நலவாரியத்தில் பதிவு செய்ய வேண்டும். சலூன் கடைகளை புதுப்பிக்க வட்டியில்லா கடன் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
The post முடி திருத்த கட்டணத்தில் மாற்றமில்லை appeared first on Dinakaran.