மும்பை: சமாஜ்வாடி கட்சி எம்எல்ஏ அபு அசிம் ஆஸ்மி, முகலாய சக்கரவர்த்தி அவுரங்கசீப்பை வெகுவாக பாராட்டிப் பேசினார். அவுரங்கசீப்பின் ஆட்சியில் இந்தியாவின் எல்லை ஆப்கானிஸ்தான் முதல் மியான்மர் வரை பரவியிருந்ததாகவும், உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 24 சதவீதமாக இருந்ததாகவும் அவர் கூறினார்.
சத்ரபதி சாம்பாஜி மகாராஜாவையும் தாக்கிப் பேசியதாக கூறப்படுகிறது. அவரது பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அபு அசிம் ஆஸ்மி பட்ஜெட் கூட்டத் தொடர் முழுவதும் சட்டப்பேரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதற்கான தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கிடையே அபு ஆஸ்மியின் மருமகளும் முன்னாள் நடிகையுமான ஆயிஷா டாகியா தனது இன்ஸ்டாகிராம் பதிவில், வடக்கு கோவாவில் எனது கணவர் அபு பர்ஹான் ஆஸ்மி மற்றும் மகன் ஆகியோரை குண்டர்கள் கடுமையாக தாக்கி, மிரட்டி, துன்புறுத்தி உள்ளனர் என்று புகார் கூறியுள்ளார்.
உபிக்கு வந்து பார் யோகி சவால்;
அபுஆஸ்மியை கடுமையாக விமர்சனம் செய்த உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்,’ அபு ஆஸ்மியை உத்தரபிரதேசத்திற்கு சமாஜ்வாடி கட்சி அழைத்துவர வேண்டும். அத்தகைய நபர்களை எப்படி கவனித்துக் கொள்ள வேண்டும் என்று உத்தரபிரதேசத்திற்கு நன்றாக தெரியும். அந்த கேடுகெட்ட நபரை உங்கள் கட்சியிலிருந்து வெளியேற்றுங்கள். பிறகு அவரை உபிக்கு வரச்சொல்லுங்கள். மற்றதை நாங்கள் பார்த்துக்கொள்வோம் ‘ என்றார்.
The post முகலாய மன்னன் அவுரங்கசீப்பை புகழ்ந்து பேசிய சமாஜ்வாடி கட்சி எம்எல்ஏ அபு ஆஸ்மி சஸ்பெண்ட் appeared first on Dinakaran.