முக அழகை பராமரிக்க!

4 hours ago 3

நன்றி குங்குமம் தோழி

பெண்களின் முக அழகைக் கெடுக்கும் முகப்பருக்களை வராமல் தடுக்க என்ன செய்யலாம்…

*ேராஜா மலரின் இதழ்களை பன்னீர் விட்டு அரைத்து, அதைத் தொடர்ந்து முகத்தில் தடவி, கழுவி வந்தால் தொடக்க நிலையில் உள்ள முகப்பருக்கள் அகன்று விடும். முகமும் பளபளப்பாகும்.

*சந்தனத்தை தினமும் புதிதாக அரைத்து பருக்களின் மேல் தடவலாம்.

*கடைகளில் கிடைக்கும் புனுகை வாங்கி பருக்கள் மேல் தடவி வந்தால் பருக்கள் உதிர்ந்து விடும்.

*தேங்காய் எண்ணெய், எலுமிச்சை சாறு, சந்தனம் மூன்றையும் அளவான முறையில் கலந்து வைத்துக் கொண்டு தொடர்ந்து தடவி வந்தால் முகப்பரு அகலும்.

*வெங்காயத்தை பாதியாக நறுக்கி, பரு உள்ள இடத்தில் அழுத்தி தேய்த்தால் பரு இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

*ஜாதிக்காய், சந்தனம், மிளகு மூன்றையும் சம அளவாக எடுத்து, விழுதாக அரைத்து, பருக்களின் மேல் தடவி வந்தால் முகப்பரு மறைந்து விடும்.

*இரவு படுக்கைக்குச் செல்லும் முன், எலுமிச்சம் பழத்தை பாதியாக நறுக்கி, முகப்பரு உள்ள இடத்தில் லேசாக பூசி, சில நிமிடங்கள் ஊறவைத்து, பின்னர் குளிர்ந்த நீரால் கழுவி வந்தால் முகப்பரு அகன்று விடும்.

*முகப்பரு அகன்று இடத்தில் ஏற்படும் கரும்புள்ளியை நீக்க தினமும் காலை, மாலை, இரவு மூன்று வேளையும் படிகாரத்தை ஊறவைத்து, அந்த தண்ணீரால் முகத்தை கழுவலாம்.

தொகுப்பு: அ.திவ்யா, காஞ்சிபுரம்.

The post முக அழகை பராமரிக்க! appeared first on Dinakaran.

Read Entire Article